Tamil Cinema | Kollywood | Tamil Movies

நடிகர் பிரபுதேவா மகன் திடீர் மரணம்; நடிகர், நடிகைகள் அஞ்சலி
[ Thursday, 04 December 2008, 08:53.04 AM GMT +05:30 ]

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. `காதலன்', `இந்து', `லவ்பேர்ட்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். `போக்கிரி' படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் விஜய் நடிக்க `வில்லு' படத்தை இயக்கி வருகிறார். லதா என்பவரை பிரபு தேவா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (வயது13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள். விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆறு மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள வீட்டில் விஷால் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஆனந்தராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

விஷால் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகரில் அடக்கம் செய்யப்படுகிறது.

<< முன்செல்ல