Tamil Cinema | Kollywood | Tamil Movies

தமிழ் படத்தில் இலியானா ஷாமுடன் நடிக்கிறாராம்
[ Monday, 24 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

ஆறு மாதமாக குளிக்காமல் இருந்தவன், உப்பு தண்ணீரில் குளித்த கதையாக இருக்கிறது இலியானாவின் தமிழ் பிரவேசம்! விஜய், அஜீத், விக்ரம், போன்ற முன்னணி ஹீரோக்கள் எல்லாம் வலை வீசியும் சிக்காத இலியானா, கடைசியில் ஷாமுடன் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போகிறாராம்.

சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஷாம். (இந்த படத்திலாவது தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வாரா பார்ப்போம்) தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார் ஷாம்.

அந்தோணி யார், சிவ மயம் ஆகிய இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது இவருக்கு. இந்த முறையாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷாம். மார்க்கெட் என்பது ராட்டினம் மாதிரி. கீழே இருக்கிற நாற்காலி நிச்சயம் ஒரு முறை மேலே ஏறும் என்ற நம்பிக்கைக்கு உதாரணமாக நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த முறையாவது தன்னை இணைத்துக் கொள்வாரா ஷாம்? இதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது

முன்செல்ல