Tamil Cinema | Kollywood | Tamil Movies

ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கபட்ட நிலையில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் - ரஜினி
[ Wednesday, 19 November 2008, 03:08.45 PM GMT +05:30 ]

தென்னிந்திய தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் யுத்த முன்னெடுப்புகளால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதம் 12ம் நாள் இடம்பெறும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்று முன்னணி நடிகரான கமல்ஹாசன் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.  

முன்செல்ல