Tamil Cinema | Kollywood | Tamil Movies

மறுபடியும் அஜீத் தாதா!
[ Sunday, 09 November 2008, 06:24.11 PM GMT +05:30 ]

மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார். ரெட் படத்தில் மிரட்டல் தாதாவாக நடித்துக் கலக்கினார். சமீபத்தில் வெளியான பில்லா படத்தில் படா தாதாவாக பட்டையைக் கிளப்பினார். இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவுள்ள சுராங்கனி படத்திலும் தாதா வேடம் போடுகிறாராம். இப்படத்தை இயக்கவிருப்பது கெளதம் மேனன். சிவாஜி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்துக்கான டிஸ்கஷனை கெளதம் மேனன் தொடங்கி விட்டார். அவரும், அஜீத்தும் சேர்ந்து கதையை ஷேப் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படத்தை பிரமாண்டமாக கொடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

பில்லாவைப் போலவே இப்படத்திலும் அஜீத்தை வித்தியாசமான கோணத்தில் காட்டவுள்ளனர். அழகிய அதேசமயம் அசுரத்தனமான தாதாவாக இப்படத்தில் வலம் வரப் போகிறாராம் அஜீத்.

இப்பவே பயந்து வருதே...