Tamil Cinema | Kollywood | Tamil Movies

ரூ.2 லட்சத்திற்கு `ஷூ' கேட்டு அடம்பிடித்தேனா?-அசின் மறுப்பு
[ Thursday, 18 December 2008, 04:59.17 PM GMT +05:30 ][ மாலைமலர் ]

இந்தியில் அசினுக்கு முதல் படமான கஜினி கிறிஸ்துமஸ் ரிலீசாக திரைக்கு வருகிறது. அடுத்ததாக சல்மான்கானுடன் `லண்டன்ட்ரீம்ஸ்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் விபுல்ஷா இயக்கும் இந்தபடம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தபடத்தின் சூட்டிங்சமீ பத்தில் பாரீசில் நடந்தது. அப்போது ஒரு காட்சியில் அசின் அணிந்து வருவதற்காக கொண்டு வந்த `ஷூ' அவருக்கு சேரவில்லை. உடனே டைரக்டர் விபல்ஷா அசினை அங்குள்ள ஒரு ஷோ-ரூமுக்கு அழைத்து சென்று பிடித்த ஷூவை எடுத்துக் கொள்ளுமாறு கூறி உள்ளார்.

அசினும் தேடிப் பிடித்து ஒரு ஷூவை எடுத்தார். அதன் விலையை கேட்ட டைரக்டருக்கு அதிர்ச்சி. காரணம் அந்த ஷூவின் விலை ரூ.2 லட்சம். என்றாலும் எடுத்தால் இந்த ஷூ வைத்தான் எடுப்பேன் என அசின் அடம் பிடித்ததால் டைரக்டரும் வேறுவழியில்லாமல் ரூ.2 லட்சத்திற்கு அந்த ஷூவையே வாங்கி கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை டைரக்டர் விபுல் ஷா உறுதிபடுத்தினார்.

ஆனால் அசின் இதனை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-  இந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி மேற்கொண்டு பேச நான் விரும்பவில்லை. படத்தின் காஸ்ட்யூம் டிசைனரை கேட்டுப்பாருங்கள் உண்மை தெரியும். இப்படித்தான் இந்தி கஜினி படத்தில் சக நடிகையான ஜியாகான் வேடத்தை இருட்டடிப்பு செய்ய சொன்னதாக என்னை பற்றி புரளி கிளப்பினார்கள்.

எனக்கு எதிராக தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் வளர்ச்சி பிடிக்காமல் யாரோ தான் இதை  கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

முன்செல்ல


Click to set custom HTML