Tamil Cinema | Kollywood | Tamil Movies

தடுமாறிய "எந்திரன்": சரியானது கோளாறு
[ Sunday, 16 November 2008, 02:40.01 AM GMT +05:30 ][ சினி சவுத் ]

எதை நினைத்து ‘எந்திரன்' என பெயர் வைத்தார்களோ தெரியவில்லை சில கோளாறுகளை சந்தித்து மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 150 கோடி ரூபாய் பட்ஜெட், உலக மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பு, ஹைடெக் இயக்குனர் ஷங்கரின் இயக்கம் என பிரமாண்டமாய் தொடங்கப்பட்டது 'எந்திரன்'. மீடியாக்களின் கைகளுக்கு படத்தின் ஸ்டில்கள் போய்விடக்கூடாது என நினைத்த ஷங்கரின் கட்டுக் காவல்களையெல்லாம் மீறி ரஜினி, ஐஸ்வர்யா டூயட் ஸ்டிகளை பக்கம் பக்கமாக பிரசுரித்து ஷங்கருக்கு பெப்பே காட்டியது பத்திரிகைகள்.

முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடித்துவிட்டு சென்னை வந்த ஷங்கருக்கு அடுத்த தலைவலி தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து போன் வழியாக வந்தது. படத்தை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் மொத்த பட்ஜெட்டாக 150 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்கிடையே பட்ஜெட் கூடுதலானாலும் ஆகலாம் என ஷங்கர் தனது சகாக்களிடம் சொன்னதுதான் தாமதம், அது அப்படியே ஐங்கரன் காதுக்கு எட்டிவிட்டதாம்.

திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தைமுடிக்காவிட்டால் வியாபார சிக்கல் ஏற்படும் என கருதிய படநிறுவனம், ஷங்கரிடம் அன்றாட கணக்குகளையும் காட்டச்சொல்லி கறாராக இருந்ததாம். அவ்வளவுதான் சூடான ஷங்கர் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே அப்செட்டாகிவிட்டாராம்.  எனவே இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போதென்றே தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் பட்ஜெட் பிரச்சனைகள் சரியாகிவிட்டதாகவும். இன்றுமுதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.  

முன்செல்ல