Tamil Cinema | Kollywood | Tamil Movies

விஜயோடு ஆட்டம்... வேண்டாம் என்று மறுத்த நடிகை
[ Thursday, 18 December 2008, 04:37.18 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

முழு படத்தையும் பார்க்க நினைச்சா, இப்படி டிரெய்லரை மட்டும் காட்ட நினைக்கிறாங்களே என்று கடும் கோபத்தில் இருக்கிறார் குத்து ரம்யா என்ற திவ்யா. தமிழில் அறிமுகம் ஆன காலம் தொட்டே விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா. சிம்பு, தனுஷ், சூர்யா என்று முன்னேறி வந்தவர் அடுத்த விஜய்தான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவர் நினைத்த மாதிரியே வில்லு படத்திலிருந்து அழைப்பு வந்தது. ஆனால், விஜய்க்கு ஜோடியாகவா? இல்லையில்லை...

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்று அழைக்கப்பட்டாராம். மெயின் பிக்சர் கேட்டவருக்கு துண்டு ரீலை கொடுத்தால் கோபம் வராதா என்ன? அதற்கு வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டாராம். இன்னொரு விஷயத்திற்காகவும் அப்செட் ஆகிவிட்டார் திவ்யா. வாரணம் ஆயிரம் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் திவ்யா, சூர்யா போர்ஷனுக்குதான் கத்தரி போட்டார்களாம்.

கொதிக்க கொதிக்க இருக்கிறார் திவ்யா. குளிர குளிர மகிழ்விக்க எந்த ஹீரோ முன் வருவாரோ?

 முன்செல்ல


Click to set custom HTML