Tamil Cinema | Kollywood | Tamil Movies

அஜீத் படம் - கெளதம் நீக்கம்
[ Monday, 10 November 2008, 07:09.22 PM GMT +05:30 ]

அஜீத் நடிக்க, சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் நீக்கப்பட்டு விட்டார். ஏகனைக் கொடுத்த கையோடு, பி்ல்லா படத்தின்போதே ஒப்புக் கொண்டபடி சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவன படத்திற்கு வந்து விட்டார் அஜீத். இப்படத்தை கெளதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பில்லா டைப்பில் தாதா வேடத்தில் அஜீத் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது.  இந்த நிலையில், படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து திடீரென கெளதம் மேனன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தரணி புக் ஆகியுள்ளார்.

விஜய்யை வைத்து கில்லி, குருவி ஆகிய படங்களைக் கொடுத்தவர் தரணி. இதைத் தொடர்ந்து தற்போது அஜீத்திடம் வந்துள்ளார் தரணி. கெளதம் சொல்லியிருந்த கதையை விட்டு விட்டு புதிதாக ஒரு கதையை செய்யச் சொல்லியுள்ளனராம் தரணியிடம். அஜீத் ரசிகர்களுக்கேற்றார் போல தற்போது கதையை உருவாக்கி வருகிறாராம் தரணி.

டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

கதை விஷயத்தில் அஜீத்துக்கும், கெளதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதே கெளதம் நீக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வழக்கமான ஆக்ஷன் கதையாக இல்லாமல் ஒரு புதிய பாணியில் அஜீத்துக்காக கதை உருவாக்கியிருந்தாராம் கெளதம். அபுசலேம் - மோனிகா பேடி உறவை அடிப்படையாகக் கொண்ட கதை இது என்கிறார்கள். சுராங்கனி என்று பெயர் கூட வைத்துவிட்டார்கள். தலைப்பு உடன்பாடாக இருந்தாலும், ஸ்க்ரிப்டில் அஜீத்துக்கு உடன்பாடு இல்லையாம்.

மேலும், ஒரு இயக்குநர் என்ற முறையில் அஜீத்துக்கு படம் குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லையாம் கௌதம். குறிப்பாக கதை பற்றிய விவாதம் தொடங்கி, நடிகர்கள் தேர்வு வரை கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் பிரபு ஆகியோரைக் கலந்து பேசாமல் அவராகவே முடிவு செய்து இறுதியில்தான் அனுமதிக்கு வந்து நின்றதாகக் கூறப்படுகிறது.

படம் துவங்குவதற்கு முன்பே இத்தனை குளறுபடி என்றால், படம் ஆரம்பித்த பிறகு எதற்கு தலைவலி என்றுதான் தயாரிப்பாளர்கள் பிரபு மற்றும் ராம்குமார் இந்த அதிரடி முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

அஜீத்திடம் தரணி ஒன் லைன் சொல்லியிருக்கிறாராம். அது அஜீத்துக்கும் பிடித்து விடவே, இப்போது அதை அஜீத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சுவாரஸ்ய முடிச்சுக்களோடு டெவலப் செய்து வருகிறார் தரணி.

மாஸ் ஹீரோ மனசு தெரிஞ்சவராச்சே 'கில்லி' மாதிரி 'தூள்' கிளப்புவார் என நம்பலாம்!