Tamil Cinema | Kollywood | Tamil Movies

ஒனக்கு 1 எனக்கு 3
[ Friday, 21 November 2008, 01:27.49 PM GMT +05:30 ]

திரிஷாவுடனான நயனதாராவின் பனிப் போர் ருசிகரமான ஒரு கம்பேரிசனுடன் படு ஜோராக வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் யார் என்பதில் இப்போது திரிஷாவுக்கும், நயனதாராவுக்கும் இடையே (ஆசின் போனதால் வந்த வினை) கடுமையாக இருக்கிறது.  இவர் வாய்ப்பை அவர் பறிப்பதாகவும், அவர் வாய்ப்பை இவர் பறிப்பதாகவும் மாறி மாறி செய்திகள் சரமாரியாக வந்து கொண்டுள்ளன.  இந்த பனிப்போரின் உச்சகட்டமாக, சிலம்பாட்டம் பட நாயகி சனா கானை, திரிஷாதான் தூண்டி விட்டு நயனதாராவைப் பற்றி காரசாரமாக விமர்சிக்க வைத்தார் என்றும் ஒரு தகவல்.

இந்த நிலையில், சமீபத்தில் நயனதாராவும், திரிஷாவும் எதேச்சையாக ஒரு நிகழ்ச்சியின்போது சந்தித்துக் கொண்டார்களாம்.  முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க திரிஷாவை நிறுத்திய நயனதாரா சூப்பர் பன்ச் ஒன்றைக் கொடுத்து விட்டு நகர்ந்துள்ளார்.  திரிஷாவைப் பார்த்து அவர், நீங்கள் கமலுடன் ஒரு படத்தில்தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். ஆனால் நானோ, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 3 படங்களில் நடித்து விட்டேன். இப்போ தெரியுதா, யார் நம்பர் ஒன் என்று பளிச்சென கூறி விட்டு நகர்ந்து போனாராம் நயனதாரா.

 முன்செல்ல