Tamil Cinema | Kollywood | Tamil Movies

பாடலை ரீமிக்ஸ் செய்வது தரம் தாழ்ந்த செயல் - ஹாரீஸ் ஜெயராஜ்
 [ Monday, 01 December 2008, 07:28.53 PM GMT +05:30 ][ மாலைமலர் ]

ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர்ராஜா, இமான் என பல இசையமைப்பாளர்கள் ரீமிக்சில் கலக்கி வருகின்றனர். பழைய நல்ல பாடல்களை இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள முடிகிறது என ரீமிக்சுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் உள்ளனர். அதே நேரத்தில் ரீமிக்ஸ் பாடல்கள் பழைய பாடல்களை கெடுத்து விடுவதாக கூறி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இசைத்துறையில் இருப்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜும் ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைப்பது தரம் தாழ்ந்த செயல் என கூறி உள்ளார்.

தான் இசையமைக்கும் படங்களின் அனைத்து பாடல்களையும் ஹிட் செய்துவிடும் திறமை படைத்த ஹாரீஸ் ஜெயராஜ் இதுவரை ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்ததில்லை.

அவர் அளித்த பேட்டி....

ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்வது என்பது அந்த பாடலின் ஒரிஜினல் கம்போசருக்கு பெருமை தான். இன்னும் 15 வருடங்கள் கழித்து என் பாடலை யாராவது ரீமிக்ஸ் செய்தால் அது எனக்கு பெருமை தான். ஆனால் என்னிடம் யாராவது ஒரு பாடலை கொடுத்து ரீமிக்ஸ் செய்ய சொன்னால் அதை செய்யமாட்டேன். என்னை பொறுத்த வரை ரீமிக்ஸ் என்பது தரம் தாழ்ந்த செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.  

 

<< முன்செல்ல