Tamil Cinema | Kollywood | Tamil Movies

எஸ்.ஜே. சூர்யாவின் புதிய கண்டுபிடிப்பு

நிகேஷா படேல். பிரபல மாடலான இவர் விரைவில் தமிழ் சினிமாவில் நடிக்கயிருக்கிறார். யாருடைய கவனத்தையும் கவராமல் இருந்த இவரை திரையில் அறிமுகப்படுத்துகிறவர் எஸ்.ஜே. சூர்யா.

‌நியூட்டனின் 3 ஆம் விதி படத்தில் நடித்துவரும் சூர்யா தெலு‌ங்கில் பவன் கல்யாண் நடிக்கும் புலி படத்தை இயக்கி வருகிறார‌். இதில் பவனுக்கு ஜோடியாக நடிப்பவர் நிகேஷா. இது இவருக்கு முதல் திரை பிரவேசம். புலி படத்தை தமிழிலும் எடுக்கயிருக்கிறார் சூர்யா. தமிழில் பவன் க‌ல்யாண் வேடத்தில் நடிப்பவர் சூர்யா. ஹீரோயின் தெலு‌ங்கில் நடித்துவரும் நிகேஷா. பவன் கல்யாணுக்குப் பிறகு வேறு எந்த நடிகரையும் வைத்து படம் இயக்குவதில்லை என்று சபதம் செய்திருக்கிறார் இவர். இனி சூர்யா இயக்கும் படத்தில் அவர்தான் ஹீரோவாக நடிப்பாராம்.

ம்.. துணிச்சலான முடிவுதான்.  



முன்செல்ல