Tamil Cinema | Kollywood | Tamil Movies

வினய்-பிறப்பால் கன்னடர் பேச்சால் தமிழர்!
[ Wednesday, 12 November 2008, 02:25.38 PM GMT +05:30 ]

பிறப்பால் கன்னடர் என்றாலும், பேச்சால் தமிழராகிவிட்டார் வினய். உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமாகும் போது இவருக்கு டப்பிங் தேவைப்பட்டது. இப்போது, சரளமான தமிழில், கரைபுரள பேசுகிறார். எல்லாம் சரண் தந்த வரம். மோதி விளையாடு படத்தில் நீங்களேதான் டப்பிங் பேச வேண்டும். தமிழை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதையடுத்துதான் வினயின் தமிழ்பேச்சு! வினயை ஹீரோவாக்கியதன் காரணத்தை சரண் விளக்கியதுதான் சுவாரஸ்யம். உன்னாலே உன்னாலே படத்தின் பாடல் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்ததாம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரணின் குழந்தை வேறெந்த சேனலையும் மாற்ற விடாமல் இந்த இளம் ஹீரோவை ரசிக்க, குழந்தைகளையே கவர்ந்த ஹீரோ, ஏன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர மாட்டார்? என்ற எண்ணம் வந்ததாம் சரணுக்கு. அதன் பின்புதான் வினயை இந்த படத்தில் நடிக்க வைத்தாராம்.

பெருத்த சோதனையிலிருந்து விடுபட்டு வெளி வந்திருக்கிறார் சரண். சொந்தப்படம் போட்ட சூடு உடலெங்கும் காயங்களாக இருந்தாலும், உதட்டில் தவழும் அதே சிரிப்புதான் அவரை இன்னும் இயக்குனர் சரணாகவே வைத்திருக்கிறது. சொந்தப்படத்தால் பொருள் இழப்பு, துரோகத்தால் வந்த சோதனை, இவற்றையெல்லாம் கடந்து வெளியே வந்திருக்கும் சரண் குறித்து இப்படி பெருமைப்பட்டார் வைரமுத்து. சரணின் இறகுகள் வெட்டப்பட்டதே தவிர சிறகுகள் வெட்டப்படவில்லை!

தனது படங்களில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தவிர வேறு யாரையும் மெட்டமைக்க விட்டதில்லை சரண். இந்த படத்தில் ஹரி-லெஸ்ஸி என்ற இரட்டையர்களை அறிமுகப்படுத்துகிறார். எனக்கும் பரத்வாஜுக்கும் கருத்து வேறுபாடுகள் என்று நினைக்க வேண்டாம். வேறொரு கலரில் இசை தேவைப்பட்டது. அதனால்தான் இந்த புதியவர்கள் என்றார்.


 முன்செல்ல