Tamil Cinema | Kollywood | Tamil Movies

"துபாய் ராணி"யில் நயன்தாராவின் படு கவர்ச்சி

[ Thursday, 18 December 2008, 04:53.09 PM GMT +05:30 ][ சினி சவுத் ]

நயன்தாரா கவர்ச்சியாக நடிக்காவிட்டால்தான் ஆச்சர்யம் என்ற நிலையில் நயன்தாரா படு கவர்ச்சியாக நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்துள்ளனர் ஒரு படத்திற்கு. ரவி தேஜா - நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் 'துபாய் சீனு'. ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இப்படம் கல்லா கட்டும் நம்பிக்கையில் 'துபாய் ராணி' பெயரில் தமிழில் டப்பிங் செய்கின்றனர்.இண்டியன் இமேஜ் வழங்க, சாரதா ரெட்டி இப்படத்தை தயாரி்த்துள்ளார்.  தமிழில் இதனை டப்பிங் செய்வதற்கு மூலகாரணமாக இருந்ததே நயன்தாராவின் கவர்ச்சிதானாம். இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு நயன்தாராவின் படு கவர்ச்சியை இந்தப் படத்தில் பார்க்கலாம் என கவர்ச்சியான விளம்பரத்தை கொடுத்து கிளாமர் ப்ரியர்களை தியேட்டருக்கு இழுக்கின்றது தயாரிப்பு நிறுவனம்.

நயன்தாரா தவிர படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. ரெண்டு படத்தில் நடித்த அனுஸ்காதான் அவர். படத்தை இயக்கியிருப்பது சீனுவைட்லா. காதல்+ஆக்ஷ்ன்+கிளாமர்= துபாய் ராணி என படத்தின் கான்செப்ட்டிற்கு கணக்கு சொல்கிறார் இயக்குனர்.  அதென்ன... தமிழ் கதாநாயகிகள் தெலுங்கில் மட்டும் அதிக கிளாமராக நடிக்கின்றனர்? என்ற கேள்வி எழுப்புவர்கள், தெலுங்கில் 'டப்பு' ஜாஸ்தி என்பதால் க்ளாமரும் 'டாப்'பாக இருக்கிறது என்பதை அறியவும்.

எல்லாம் துட்டுதான் நைனா...!

முன்செல்ல


Click to set custom HTML